2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் விழிப்புக் குழுக்களை அமைத்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நாவாந்துறை பகுதியில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து யாழ். மக்களை பாதுகாப்பதற்காக கிராமம் தோறும் விளிப்பு குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது உருவாகியுள்ள கிறிஸ் மனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அவலங்கள் மற்றும் எதிர்காலத்தில் களவுகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்பு குழுக்களை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பிரதி பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த உள்ளிட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,  மேலதிக அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X