Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மக்கள் சட்டத்தை கையில் எடுத்தமையினாலேயே நாங்கள் கைது செய்தோம் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.
இன்று செவ்வாய் கிழமை யாழ். இராணுவ சிவில் அலுவலகத்தில் நேற்று நாவாந்துறை பகுதியில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சட்டத்தை மீறி நாங்கள் வேலை செய்யவில்லை. மக்கள் சட்டத்தை கையில் எடுத்தார்கள் அதனால் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம் அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
நாவாந்துறை சம்பவத்தின் போது மக்களினால் பொல்லுகள், சைக்கிள் செயின், ரீயூப் லைட், கல்லுகள் என்பவற்றைக் கொண்டு பொலிஸார் மீது தக்குதல் நடத்தினர். அதன் போது நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளனர் இரண்டு பொலிஸ் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
அரசியல் வாதிகளின் பின்புலத்துடன் திட்டமிட்ட செயற்பாடாகவே நாம் இதனை கருதுகின்றோம். சமாதானத்தை ஏற்படுத்த சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இது ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்றார்
aj Wednesday, 24 August 2011 04:56 AM
மக்கள் சட்டத்தை கையில் எடுக்க காரணமாக இருந்த அந்த கவாலி வீரர்களை இன்னும் கைது செய்யவில்லை, நீதி முனனர் நிறுத்தவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வரும்போது ................... நல்ல நாடுடா நல்ல சட்டம்டா.
Reply : 0 0
meenavan Wednesday, 24 August 2011 12:22 PM
போலீசார் சட்டத்தை கையிலேடுத்து காட்டு தர்பார் நடத்தும்போது,பொது மகன் என்னசெய்யலாம்? இதற்காக அரசியல் பின்புலம் என்று சொல்லாதீர்கள்.
Reply : 0 0
Anbalan Sunday, 28 August 2011 01:55 PM
கைது மட்டுமா செய்தீர்கள். கதற கதற வச்சு அடித்தார்களாமே அதை சொல்ல மாட்டீங்களா? எலும்புகள் முறிக்கப் பட்டு சிகிச்சை பெறுகிறார்களே அதை சொல்ல மாட்டீங்களா? முதலில் நல்ல மனிதர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு சட்டம் பேசலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .