Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நல்லூர் கந்தசாமி கோவில்த் திருவிழாவின் பாதுகாப்பு பணிக்கென மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இன மத பேதங்களைக் கடந்து வருகை தருவதினால் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. இதனால் கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய வடமாவட்டங்களிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்கெனவே நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்ப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களோடு மக்களாக பொதுமக்களின் உடைகளிலும் பொலிஸ் சீருடையிலும் இவர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வரவழைக்கப்பட்ட பொலிஸாரும் அவ்வாறே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நெவில் பத்மதேவா குறிப்பிட்டுள்ளார்.
கோவிலுக்கு வரும் மக்கள் தங்களது தங்கநகைகளை குறித்து அவதானமாக இருக்கவும். முடிந்தவரையில் தங்கநகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுங்களெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .