2025 மே 19, திங்கட்கிழமை

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் பதவி பொறுப்பேற்ற கடிதங்களை கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் கடந்த மாதம்  நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றியடைந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று தமது சத்தியக்கடதாசி மற்றும் பதவியைப் பொறுப்பேற்ற கடிதங்களை பிரதேசசபைச் செயலாளர்களிடம் கையளித்துள்ளனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன.
இதேவேளை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாததுடன் முதல் தடவையாக சபைகள் கூடிய வேளையிலும் கூட கூட்டங்களில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்தார்கள்.

உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது பதவிகளை ஏற்றுக்கொண்டமைக்கான கடிதங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் முடிவடைந்த நிலையிலும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமை குறித்து பொதுமக்களிடத்தில் விமர்சனங்களுக்குள்ளாகிய நிலையில் நேற்று தமது பத்திரங்களை சபைச் செயலாளர்களிடம் கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X