2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். கல்விப் பணிப்பாளராக செல்வராஜா நியமனம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக, வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வி.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளராக ஹாட்லி கல்லூரி அதிபர் கே.தெய்வேந்திர ராஜா நியமனம் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்களிலிருந்து தெரியவருவதாவது...

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக வி.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 6 வருடங்களாக வடமராட்சி கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன் யுத்த காலத்தில் வடமராட்சி கிழக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராக வடமராட்சி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புஸ்பலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, தீவகம் மற்றும் தென் மராட்சி கல்விப் பணிப்பாளர்களுக்கும் விரைவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X