Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 04 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் நோக்குடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை 10 ஆம் திகதி உள்ள ஓர் ஆலய முன்றலில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமயத் துறவிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மர்ம மனிதர்கள் விவகாரம், அநாமதேய நபர்களின் நடமாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் தொடர் விளைவாக பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்களை துரத்தி பிடிப்பதில் ஈடுபட்ட பொதுமக்கள் மோசமாக தாக்கப்பட்டு குடாநாடு முழுவதும் பயத்துடன் மக்கள் இருப்பது மற்றும் மக்களின் இயல்பு வாழ்வு மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இக் கூட்டத்திற்கு நல்லையாதீன முதல்வர், தென்னிந்திய திருச்சபை பேராயர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்பிரேமச்சந்திரன், ஈ. சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த. சித்தார்த்தன், எம். கே. சிவாஜிலிங்கம், என் .சிறீகாந்தா, தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். எக்ஸ். குலநாயகம், சூழவியலாளர் பொ. ஐங்கரநேசன், யாழ் மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், யாழ். மனிதவுரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இக்கூட்டடத்தில் பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன:
* குடாநாட்டிலும் மற்றும் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், மலையகத்தின் சில இடங்களிலும் மற்றும் புத்தளத்திலும் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐனாதிபதியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதுடன், இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்கள், அறிவுஜீவிகள், அரசியல் நடவடிக்கையாளர்கள் என்போரை உள்ளடக்கிய ஓர் குழு கலந்து கொள்ள வேண்டும்.
* எதிர்வரும் செவ்வாய்க்கிமை (2011-09-06) ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்குகிழக்கின் குறிப்பாக குடாநாட்டில் இன்றைய நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
ruban Monday, 05 September 2011 06:07 AM
இதுவும் நல்ல விடயம் தான்.
Reply : 0 0
THIVAAN Monday, 05 September 2011 02:46 PM
ஆனத்தசங்கரி கடிதம் எழுதுவது , ந்திக்கபோவது ஏன் என்பது புரியவில்லை. இது மக்களை முட்டாள்கள் ஆக்குவதுபோல் இருக்கிறது .
Reply : 0 0
Reeza F M Monday, 05 September 2011 05:57 PM
மர்ம மனிதன் விடயத்தில் உள்நாட்டை போலே வெளிநாடும் மௌனம் சாதிக்காமல் இருக்குமாயின் நல்லம்.
Reply : 0 0
meenavan Monday, 05 September 2011 09:42 PM
சனிக்கிழமை உண்ணாவிரதத்தையும் மர்ம மனிதர்கள் தாக்காதிருக்க பிரார்த்திப்போம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago