Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். பண்டதரிப்புப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபரொருவரின் தாக்குதலில் குடும்பப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பணிப்புலம் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான கந்தசாமி நீலலோஜினி (வயது 44) என்பவரே இனந்தெரியாத நபரின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
பண்டத்தரிப்பு பணிப்புலம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் இனந்தெரியாத நபர் குறித்த வீட்டிற்கு பின்புறமாகச் சென்று கதவைத் திறக்க முற்பட்ட வேளையில் அவ்வீட்டுப் பெண் ரோச்லைற் ஒளியைப் பாய்ச்சி இதனை அவதானித்ததாகவும் இதன்போது கறுப்புடை அணிந்த நபரொருவர் அப்பெண்ணின் வாயையும் கழுத்தையும் அமர்த்தியுள்ளார். மேற்படி பெண் திமிறிக்கொண்டு கூச்சலிடவே இனந்தெரியாத நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் நாகரஞ்சனி மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள நிலைமையை அவதானித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago