Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 09 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்கள் கிராம மட்டங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரும் யாழ். பாதுகாப்பு செயற்குழுத் தலைவருமான ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ். நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கிராம மட்ட விழிப்புணர்வுக் குழுக்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு இனந்தெரியாத நபர்களின் நடமாட்டங்கள் தொடர்பாக அறிவிக்க முடியும். அரசாங்க அதிபர் ஊடாக ஆளுநருக்கு அறிவிக்கப்படும். அத்துடன் கிராம மட்டக் குழுக்கள் இராணுவம், பொலிஸாருக்கும் தகவல் வழங்க முடியும். அந்தக் குழுக்களுக்கு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் தொலைபேசி இலக்கங்களையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
பத்திரிகையில் வெளிவரும் மர்ம மனிதர்கள் தொடர்பான விடயங்கள் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும். செய்தியில் தவறு இருப்பின் மறுப்பு கொடுப்போம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago