2025 மே 19, திங்கட்கிழமை

அச்சமின்மையே விபத்துக்கள் சம்பவிக்க காரணம்: வைத்தியர் பசுபதிராஜா பவானி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் வாகன விபத்துக்கள் காரணமாக சிகிச்சை பெறுவோரின் தொகை கடந்த வாரங்களில் அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பசுபதிராஜா பவானி இன்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாளில் ஆறு பேர் வரையில் வாகன விபத்துக்கள் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த வாரங்களில் அதிகமானவர்கள் வாகன விபத்துக்கள் காரணமான சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிகரித்த வாகன நெருக்கடிகளினாலேயே இந்த விபத்துக்கள் சம்பவிக்கின்றன. மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்  விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனரெனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவதானமின்மை, அவசரம், விபத்துக்கள் குறித்து அச்சமின்மை போன்ற காரணங்களினாலேயே யாழ். குடாநாட்டில்  விபத்துக்கள் அதிகரித்து செல்வதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பசுபதிராஜா பவானி  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X