Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளதென்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் வினாவியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்த ரொபர்ட் ஓ பிளேக் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினாவினார்.
மக்களுடைய வாழ்வாதார முன்னேற்றங்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கள், தற்போதைய யாழ். நிலைவரம் தொடர்பாகவும் ரொபர்ட் ஓ பிளேக் கேட்டறிந்துகொண்டதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு என்ன தடையேற்பட்டுள்ளதெனவும் வீட்டுத்திட்ட வசதிகள் யாழ். மக்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றதெனவும் இந்த வீட்டுத்திட்ட வசதிகள் திருப்திகரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாவெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
ரொபாட் ஓ பிளேக்கின் கேள்விகளுக்கு பதிலளித்த யாழ். மேலதிக அரசாங்க அதிபர்,
யாழ். குடாநாட்டில் இன்னும் 11048 குடும்பங்களைச் சேர்ந்த 410,147 பேர் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே மீள்குடியேற்ற நடவடிக்கை தாமதமடையக் காரணமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், யாழ். குடாநாட்டின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கு விளக்கமளிக்கப்பட்டது.
யாழ். குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக தான் இங்கு விஜயம் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக கொழும்பில் நடைபெறவுள்ள செய்தியாளர் மாநாட்டில் தான் பேசவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரொபர்ட் ஓ பிளேக் யாழ். மாவட்ட அரசசார்பற்ற இணையப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
neethan Tuesday, 13 September 2011 08:12 PM
அரச அதிபர் கூற்று 11048 குடும்பங்களை சேர்ந்த 410147 பேர் மீள் குடியேற்றப்படவேண்டும் என்பது,அரசின் தவறுக்கு சான்று.இந்நிலையில் ஒ பிலக் அரசுடன் காட்டமாகவே நடப்பார்,அத்துடன் செய்தியாளர் மாநாடும் உள்ளது.அதில் ஒ பிலக் எவ்வகையான கருத்து சொல்வாரோ? இலங்கை அரசுக்கு ithu நல்ல சகுனமில்லை. எலி அறுக்கும் தூக்கமாட்டது நிலைதான் அரசுக்கு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .