Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்,நவம்)
மலேசியாவிலிருந்து வருகை தந்திருக்கும் 10 பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மலேசிய உயர்கல்விக் கண்காட்சியொன்று இன்று யாழ், ஞானம்ஸ் உல்லாச விடுதியில் நடைபெறவுள்ளது.
சிகரம் ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியில், பிரித்தானியாவின் நொட்டிங்காம் பல்கலைக்கழக மலேசியக் கிளை உட்பட, 10 முன்னணி பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமது கற்கைநெறிகள் பற்றிய விளக்கத்தை அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் இந்தக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டுக் கல்வியில் நாட்டம் கொண்ட மாணவர்களுக்கு, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பட்டக்கல்விகளை, மிகக் குறைந்த செலவில் இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
விரும்பினால் ஒரு வருடம் மலேசியாவில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்த பின்னர் மேற்படி நாடுகளில் பட்டக்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களையும் இந்தப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தித் தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பட்டகல்வியை மாத்திரமன்றி, பட்ட மேற்படிப்பு, க.பொ.த. சாதாரணதரம் வரையில் படித்த மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புடன் கூடிய கற்கைநெறிகள் மற்றும், க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையைப் பூர்த்திசெய்யாத 18 – 45 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிக் கற்கைநெறிகள் என்று, ஏராளமான கற்கைநெறிகளை இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
இதுவரை காலமும் கொழும்பில் நடத்தப்பட்டு வந்த இந்தக் கண்காட்சி, முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், 10 பல்கலைக்கழகங்களின் பங்கேற்புடன் நடத்தப்படுவதாக, கண்காட்சி ஒழுங்குபடுத்துநர்களான மலேசிய வின்னிங் மக்னிற்யூட் நிறுவன தலைவர் கபிலன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago