Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,கர்ணன்)
மனிதநேய நிவாரணப்பணியில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளதென மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மிசைன்னூதீன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையின் திறப்பு விழாவின்போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'மனிதநேயம் மற்றும் அனைத்து நிவாரண உதவியின் மலேசியாவின் ஈடுபாடானது அரசாங்க மட்டத்தில் இருதரப்பு அல்லது பல்தரப்பு உறவுகளையும் அரசசார்பற்ற நிறுவனங்களிளூடான பங்களிப்பு மற்றும் மக்களுக்கு மக்கள் பங்குபற்றல் ஆகிய மூன்று நீண்டகால அணுகுமுறையின் அடிப்படையில் இப்பிரதேச மக்களுக்கு எமது நாட்டால் புனரமைத்து கையளிக்கப்படுகின்றது.
இந்த அணுகுமுறைகளின் அடிப்படையிலே தேவை அதிகமாகவுள்ள நாடுகளை அடைந்து உதவி வழங்குவதற்கு நாம் எப்பொழுதும் முன்செல்கின்றோம். அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றலானது சர்வதேச ரீதியில் மனிதநேய உதவியில் மலேசியாவின் உதவியை மேலும் வலுப்படுத்துகின்றது. அவ்வாறான அரசசார்பற்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான செயற்றிறன்மிக்க பங்களிப்பை மலேசிய மேசி நிறுவனம் வழங்கி வருகின்றது.
இவ்வைத்தியசாலையானது நிவாரண அறக்கட்டளையினூடாக புனரமைக்கப்பட்ட முதலாவது வைத்தியசாலையாகும். இவ்வைத்தியசாலையினூடாக இப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நலனுக்குப் பங்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியதிற்;கு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சுகாதகர அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளராகியோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago