2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தபால் மா அதிபருக்கு எதிரான தொழிற் சங்க நடவடிக்கையில் இணைய அழைப்பு

Super User   / 2011 நவம்பர் 10 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தபால் மா அதிபர் எம்.கே.தீ.திஸநாயக்கவின் நிர்வாக சேவையில் பல குறைபாடுகள் உள்ளமையினால் நிவர்த்தி செய்யமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இன்று வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தபால் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் யாழ். கிளை  கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். பிராந்திய தபால் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை தபால் தொலைத்தொடர்பு சேவைகள் தாய் சங்கத்தின் பொருலாளர் பிரதீப் குமார தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த தொழில் சங்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் தபால் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் யாழ். கிளை அதிகாரிகளையும் கலந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, இலங்கை தபால் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் யாழ். கிளை சங்கத்தினருக்கான புதிய நிர்வாகிகளும் தெரிவுகளும் நடைபெற்றன.

அதன்படி புதிய தலைவராக எஸ்.வில்வராசசிங்கம், உப தலைவராக ம.மரிய ரெறன்ஸ், செயலாளராக சி. சிவபாலன், உப செயலாளராக  அ. கணேசமூர்த்தி, பொருளாலராக ப. கண்ணதாசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X