Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 11 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்,கவிசுகி,கிரிசன்)
யாழ்ப்பாணம் வரணி கரப்பன்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
சிவசுப்பிரமணியம் தயாபரன் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றிலிருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் அவரது வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியை சொந்த இடமாகவும் மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மேற்படி நபர், தனது சொந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்துசெல்வது வழக்கமாகும். அவ்வாறே மேற்படி நபர் தனது சொந்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை வந்துள்ளார். பின்னர் மீண்டும் மீசாலையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லவில்லையெனவும் இதனால் அவரைத் தேடி கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள வீட்டிற்கு உறவினர்கள் வந்தபோது மேற்படி நபர் சடலமாக கிடப்பதைக் கண்டனர்.
பின்னர் இது தொடர்பில் அவரது உறவினர்கள் யாழ். பொலிஸாருக்கு தெரியப்படுத்தவே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் கீழ்த்தளம் இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விடப்பட்ட நிலையில் அவ்வீட்டின் இரண்டாம் மாடியிலேயே குறித்த நபர் அவ்வப்போது தங்கிச்செல்வது வழமையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன், சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் அதிகரித்த இரத்தப்போக்கு காரணமாகவே மரணம் சம்பவித்ததாகவும் கூறினார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நீதிபதி ஆ.பிறேமசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
KLM Saturday, 12 November 2011 02:11 AM
என்ன காரணமோ யார் அறிவார்?
Reply : 0 0
kd Saturday, 12 November 2011 02:37 AM
எப்போ? தீரும் இந்தக் கொலைக் கலாச்சாரம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
34 minute ago