Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட பகுதியிலுள்ள அரச வெற்றிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4,980 பேருக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியாக உள்ளவர்களுக்கு மிக விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தாதிய உத்தியோத்தர்கள் மற்றும் குடும்பநல உத்தியோக்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு அனுமதி கோரும் பத்திரத்தின் பிரகாரமே இந்த நியமனங்கள் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் மட்டும் 1,985 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வடக்கில் 95 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு நீண்ட காலத்தின் பின்னர் பெருந்தொகையான மருத்துவ மாதுகள் மற்றும் மருத்துவ தாதியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வன்னியில் சேதமடைந்துள்ள அரசினர் வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு அவற்றுக்கான ஆளணிகளும் நியமிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏசந்திரசிறி மேலும் தெரிவித்தார்.
mtmsiyath Wednesday, 16 November 2011 01:50 AM
சார்! வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு அரச நியமனத்தில் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்குங்கள்.....ஏன்? விரட்டப்பட்டமைக்காக................
Reply : 0 0
UMMPA Thursday, 17 November 2011 07:53 PM
யார் நியமிக்கப்பட்டார்கள் ! தனி பெரும்பான்மை இனத்தவர்கள் மட்டுமா இல்ல உரியவர்களுக்கா ! முடிந்தால் தரவுகளை இங்கு போடவும். நன்றி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
49 minute ago