2025 மே 19, திங்கட்கிழமை

'தமிழ் இதழியல் வரலாறு' கண்காட்சி

A.P.Mathan   / 2012 ஜூன் 28 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களும் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடாத்திய 'தமிழ் இதழியல் வரலாறு' கண்காட்சி இன்று வியாழக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்தக் கண்காட்சியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்டணம் சம்பிரதாயப்படி ஆரம்பித்து வைத்தார்.

இக்கண்காட்சியில் அச்சு ஊடகங்களின் ஆரம்பகால செயற்பாடு, புகைப்படத்துறையின் பரிமாணம், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வெளிவந்த பத்திரிகைளின் முதற்பிரதிகள், சஞ்சிகைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சிறப்பு அம்சமாக பத்திரிகை ஒன்று எவ்வாறு வெளிவருகிறது என்ற ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்டணம், மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர், யாழ். பல்கலைக் கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்டணம்... “ஊடகத்துறையைத் தெரிவு செய்கின்ற மாணவர்கள் மொழிப்புலமையில் தேர்ச்சியுள்ளவர்களாக தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அப்போது ஏனைய மொழியில் வெளியவருகின்ற செய்திகளை அறிந்து கொள்வதுடன் அதனை மக்களுக்கு சொல்லக்கூடியதாகவும் இருக்கும். செய்தி என்பது கற்பனை கலந்தது அல்ல. கற்பனை கலந்தால் அது கதை. செய்தியைக் கொடுக்கின்ற போது கற்பனை கலந்தால் அதன் உண்மைத்தன்மை குறைந்து விடும். உள்ளதை உள்ளவாறு மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய மொழி நடையில் கொடுக்கவேண்டும்” என்றார்.

“யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஊடாக மொழிபெயர்பு பயிற்சி நெறியினை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தப்பயிற்சி நெறியும் ஆரம்பிக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X