2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்திசாலையின் ஊழல் விசாரணை அறிக்கைப் பிரதிகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைப்பு: சிறிகுகநேசன்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். போதனா வைத்திசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கைப் பிரதிகள் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், வைத்திய நிபுணர் ஜெயக்குமாரனின் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  இவரது வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பில் எவரும் கைதாகத நிலையில் வைத்தியர்கள் போராட்டத்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்திருப்பதாகவும் இதனால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஒரு வாரகாலத்தில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 பேரும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  கடந்த ஒரு வாரகாலத்தில் யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 3 கத்திக்குத்து சம்பவங்களும் 3 திருட்டுச்சம்பவங்களும் ஒரு கொள்ளைச் சம்பவமும் ஒரு பாலியல் துஷ்பிரயோகமும் பதிவாகியுள்ளதுடன், இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1010 கிராம் கஞ்சாவும் 14 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X