2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் உரிமை கோரப்படாத சடலத்தை பொறுப்பேற்க கோரிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (ஜெ.டானியல், ரஜனி)
யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் உரிமைகோரப்படாத சடலங்களை உரியவர்கள் உரிமைகோரும்படி யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

யாழ்.கோப்பாய் வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்த எஸ்.மாடசாமி (வயது 50), இம் மாதம் 6 ஆம் திகதி உயிரிழந்த நுவரெலியாவைச் சேந்த பி. விஜயகுமார் (வயது 41), நயினாதீவு 2ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த ஆர். குணதாஸ் ஆகியோரது  சடலங்கள்  யாழ்.போதனா வைத்தியசசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இச்சடலங்கள் ஒரு வாரத்திற்குள் உரிமைகோரப்படாது விட்டால் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரச செலவில் தகனம் செய்யப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X