2025 மே 19, திங்கட்கிழமை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் - யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு

Super User   / 2012 ஜூலை 09 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரங்கின் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது, யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தினை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாவட்;டத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுற்றுலா சம்பந்தப்பட்ட தகவல்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பின் போது திரட்டிச் சென்றுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, யாழ். மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலை சம்பந்தமாக ஆராய்ந்ததுடன், அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
யாழ் மாவட்ட அபிவிருத்திகளில் மீன்பிடி கைத்தொழில் சுற்றுலா கால்நடை, விவசாயம் போன்ற துறைகள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலாளரினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X