2025 மே 19, திங்கட்கிழமை

பலாலி விமானப்படைத்தளம், காங்கேசந்துறை துறைமுக பாதுகாப்புக்காக காணிகள் சுவீகரிக்கப்படும்: மஹிந்த ஹத்த

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'யாழ். பலாலி விமானப் படைத்தளம் மற்றும் காங்கேசந்துறை துறைமுகம் என்பன தற்போது பாரிய அபிவிருத்திகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பாதுகாப்பு நடைமுறை கருதி குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட காணிப் பிரதேசம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் சுவீகரிக்கப்படும்' என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, 'யாழ் குடாநாட்டு மக்களின் காணிகளை சுவீகரித்து அவற்றில் இராணுவ முகாம்களை அமைக்கும் நோக்கம் இல்லை. யுத்தத்தின் போது தனியார் காணிகளில் முகாம்களை அமைத்த இராணுவம், தற்போது அவற்றை மீண்டும் பொதுமக்களிடமே கையளித்து வருகின்றது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ருன்கின் உடனான சந்திப்பின் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது,

'கடந்த  2009ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது யாழ். குடாநாட்டில் எஞ்சியுள்ள படையினர் அங்குள்ள பொதுமக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்றே தேசிய பாதுகாப்புக்கு இராணுவத்தினர் தேவை அவசியமாகின்றது. அவ்வாறு தேவைப்படும் பகுதியினரே தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அவர்களும் எதிர்காலத்தில் குறைக்கப்பட வாய்ப்புண்டு.

எவ்வாறாயினும் 1980களின் ஆரம்பத்தில் ஏற்பட்டதானதொரு நிலைமையை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள இராணுவம் ஒருபோதும் இடமளிக்காது' என்று யாழ். கட்டளைத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X