2025 மே 19, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையை ஆட்சேபித்து வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

காணி சுவீகரிப்புக்கு எதிராக நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி நாளை புதன்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

'யாழ். பஸ் நிலையத்தில் தமிழ் மக்களினால் நடத்தப்படவிருந்த தாயக பூமியின் காணி சுவீரிப்பு போராட்டத்திற்கு யாழ்.நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அதற்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எங்களுடைய சட்டத்தரணி ஊடாக இந்த வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X