2025 மே 19, திங்கட்கிழமை

வடமாகாணசபைத் தேர்தலுக்கான ஜனாதிபதியின் கருத்தில் உள்நோக்கம் காணப்படுகின்றது: கருணாநிதி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள கருத்தில் உள்நோக்கம் காணப்படுவதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தல்  2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் நடைமுறைகளில் வாக்காளர்கள் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.  இதில் ஏதோவொரு உள்நோக்கம் கொண்ட கருத்து இருப்பதாகத் தெரிகின்றது.

இதேவேளை, இலங்கையின் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர், கடந்த மாதம் பூசாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஏனைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள்,  பூசாவுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டுவர வேண்டுமென கோரியுள்ளனர்;. இதற்கு மறுப்புத் தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை இவர்கள் ஒரே அறையில் வைத்துப் பூட்டினர். இதனால் வவுனியா சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையிலிருந்த  201 கைதிகளும் அநுராதபுரத்திலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இக்கலவரத்தின்போது  தமிழ் அரசியல் கைதிகள் பலர் காயமடைந்ததுடன்,  கணேசன் நிமலரூபன் என்பவர் மரணமடைந்துள்ளார். ஆனால் அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் தகனம் செய்யவேண்டுமென பெற்றோர்  கோரியபோதிலும்,  இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன்,  மற்றுமொரு தமிழ் அரசியல் கைதி மயக்கமான நிலையில் வைத்தியசாலையிலுள்ளார்' என்றார். தினமணி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X