2025 மே 19, திங்கட்கிழமை

நிரந்தர நியமனம் கோரி யாழ். உயர் தேசிய கணக்கியல், வர்த்தக, முகாமைத்துவ பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி, ஜெ.டானியல்)

தங்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட உயர் தேசிய கணக்கியல் வர்த்தக முகாமைத்துவ பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 450க்கு மேற்பட்ட பட்டதாரிகள் தமக்கு நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 'ஏனைய மாவட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்க யாழ்.மாவட்டத்தில் ஏன் இந்தப் புறக்கணிப்புக்கள்', 'எமக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்', 'யாழ். மாவட்டத்திற்கு மட்டும் தனியான சுற்றறிக்கையா?' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

'யாழ். மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக  புறக்கணிக்ப்பட்டு வருகின்றனர். தென் பகுதியில் உள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும். யாழ். மாவட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க மறுப்பது எதற்காக?' என்று  அவர்கள் கேள்வி எழுப்பினர். பலரை சந்தித்து கலந்துரையாடியபோது நியமனம் தொடர்பாக பரிசீலனை மேற்கொள்வதாக உறுதியளித்த பின்னர் தம்மை கைவிடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X