2025 மே 19, திங்கட்கிழமை

மதுபோதையில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு அபராதம்

Super User   / 2012 ஜூலை 12 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜினி)

மதுபோதையில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததுடன் சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய இரு நபர்களுக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 4,000, 10,000 ரூபா அபராதம்; விதித்துள்ளது.

கே.கே.எஸ் வீதி மற்றும் கோண்டாவில் பகுதி ஆகியவற்றில் யாழ்  பொலிஸாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நபருக்கு 4,000 ரூபா தண்டமும், நயினாதீவு பகுதியை சேர்ந்த நபருக்கு 10,000 ரூபா தண்டமும் செலுத்துமாறு யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X