2025 மே 19, திங்கட்கிழமை

தவறானமுறையில் மின்சாரம் பெற்றார் என்று குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என தீர்ப்பு

A.P.Mathan   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜினி)

யாழ். நகரிலுள்ள தனியார் கலர் லப் ஒன்றின் உரிமையாளருக்கு எதிராக மின்சார சபையினால் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து குறித்த நபரை யாழ். நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

27.11.2011 அன்று யாழ். மின்சார சபையின் பணிப்புரைக்கு அமைய யாழ். பொலிஸாரினால் யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்மானி உடைத்து சேதப்படுத்தி மின்சாரம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டு இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 லட்சத்து 65 ஆயிரத்தி 927 ரூபா மின்சார சபைக்கு நட்டஈட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென்று மின்சார சபையினால் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு தொடரப்பட்ட காலத்தில் இருந்து குறித்தநபர் குற்றமற்றவர் என வாதாடி வந்தார். மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா 4 காரணங்களை மன்றில் சுட்டிக் காட்டினார்.

மின்சார சபை கட்டளை சட்டத்தின் பிரிவுக்கு அமைய குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டாவதாக, மின்சார சபை ஆணையாளரினால் அளிக்கப்பட்ட அனுமதி முறைப்படி அமையவில்லை. மூன்றாவதாக எதிரிக்கான குற்றச்சாட்டு அவர் தெரிந்து கொண்டு அலட்சியமாக மின்மானிக்கு சேதம் விளைவித்தவர் என வழக்கு தொடுநர் சார்பாக நிரூபிக்க தவறிவிட்டது. நான்காவதாக, எதிரியால் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் வழக்கு தொடுநர் சார்பில் நியாயமற்ற சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை என சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவரை குற்றமற்றவர் என விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

மின்சார சபையினால் வழக்கு தொடுக்கப்பட்ட காலத்தில் இருந்து குறித்த கலர் லாப்பிற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X