2025 மே 19, திங்கட்கிழமை

பனை உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவற்கான விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (ஜெ.டானியல்)
யாழ். கைதடி பனை அபிவிருத்தி சபை செயலகத்திற்கு முன்னால் பனைப்பொருள் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சி, விற்பனை உற்பத்தி நிலையம் மற்றும் பனை சார்ந்த உணவுப் பொருட்களை உள்ளடக்கிய காட்சி நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இக்கட்டடித்திற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வினை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்த திட்டமிடப்படடிருப்பதாக பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பனை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தவற்கு கற்பகம் என்னும் பெயரில் வடக்கு கிழக்கில் பத்து இடங்களிலும், கொழும்பில் பம்பலப்பிட்டியிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றின் மூலம் பனை உற்பத்திப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முடியாது என்ற காரணத்தினால் பனைசார் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு கார்கில்ஸ் பூட் சிற்றியுடன் ஆரம்ப கட்டமாக பனங்கட்டியை விற்பனை செய்தவற்கு பனை அபிவிருத்தி சபை ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

இதன்மூலம் பனங்கட்டி தெற்குப் பகுதியில் உள்ள கார்கில்ஸ் பூட் சிற்றி நிறுவனங்கள் ஊடாக விற்பனை செய்து வருவதால் தென்பகுதி மக்கள் கூடுதலாக பனங்கட்டியைக் கொள்வனவு செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ஏனைய பனைசார் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து சந்தைப்படுத்துவதற்கு பூட் சிற்றி நிலையங்களில் பனைசார் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விற்பனைத் தளம் ஒன்றை ஒதுக்கித்தருமாறு பனை அபிவிருத்தி சபை கோரிக்கை விடுத்துள்ளதுடன் உடன்பாட்டுக்கு வரும்போது கூடுதலான சுழற்சி ஏற்பட்டு பனம் கைப்பணிப் பொருட்களை இலங்கை முழுவதும் சந்தைப்படுத்தும் நிலை ஏற்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X