2025 மே 19, திங்கட்கிழமை

வன்னி ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணை

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜினி)

வன்னிப் பகுதி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பாக நாளை யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 9.00 மணிக்கு வடமாகாண கல்வி பணிப்பாளர் ரவீந்திரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் இருவரிடமும் விசாரணை இடம்பெறவுள்ளது.

வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தமது சேவைக்காலத்தினை நிறைவு செய்துள்ள 104 ஆசிரியர்கள் யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என வடமாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் பின்னர் குறித்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் குழப்பமடைந்த ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு 104 ஆசிரியர்கள் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நாளை வடமாகாண கல்வி அமைச்சரிடமும் வடமாகாண கல்வி பணிப்பாளரிடமும்  விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X