2025 மே 19, திங்கட்கிழமை

வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மக்களிடம் உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜினி)

இதுவரை காலமும் வாக்காளர் விண்ணப்ப படிவங்களை நிரப்பாத பொதுமக்கள், உரிமை கோரிக்கை விண்ணப்பத்தினை நிரப்பி யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ. குகநாதன் தெரிவித்துள்ளார்.

பி.சி. படிவங்களை நிரப்பி தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தால் 2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இதுவரை காலமும் பதியாதவர்கள் உரிமை கோரிக்கை விண்ணப்பத்தின் மூலம் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

அனுப்பி வைக்கப்பட்ட உரிமை கோரிக்கை விண்ணப்ப படிவங்கள் ஆவணி மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் விசாரணை மேற்கொள்வதற்கு விண்ணப்பதாரிகளிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

விசாரணையின் பின்னர் வாக்காளர் பதிவு இடம்பெறும். கடிதங்களை அனுப்பி வைக்கப்படும் பொதுமக்கள், தமது கிராம அலுவலருடன் பிரதேச செயலகங்களுக்கு வருகை தருமிடத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்காளர் பதிவு நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு உரிமை கோரிக்கை விண்ணப்ப படிவங்களை நிரப்பி அனுப்பும் பொதுமக்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும். உரிமை கோரிக்கை விண்ணப்ப படிவத்தின் மூலம் பி.சி படிவங்களை நிரப்பி புதிதாக பதிவுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரினால் விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X