2025 மே 19, திங்கட்கிழமை

ஊ.சே.நி., ஊ.ந.நி. பங்களிப்புத் தொகைகளை செலுத்தத்தவறிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

நிறுவனங்களில் அங்கத்தவர்களாக இருந்து பணிபுரிபவர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான பங்களிப்புத் தொகையைக் செலுத்தத்தவறிய யாழ்ப்பாணத்திலுள்ள 7 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச்சபையின் யாழ். பிராந்திய பொறுப்பதிகாரி ஜெ.தமிழகன் தெரிவித்தார்.

யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் 4 வழக்குகளும் மல்லாகம், பருத்தித்துறை, ஊர்காவற்றுறை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தலா ஒரு வழக்கும் தங்களது நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்; 1005 நிறுவனங்கள் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச்சபையில் பதிவுசெய்யப்பட்டு இயங்குவதாகவும்  இவற்றில் பல நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊழியர் பங்களிப்புத் தொகையைக் செலுத்தத்தவறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X