2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியசாலையிலுள்ள உரிமை கோரப்படாத சடலங்களை அகற்ற நடவடிக்கை: பணிப்பாளர்

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ் வைத்திசாலையின் பிரேத அறையில் உள்ள உரிமை கோரப்படாத சடலங்கள் மற்றும் மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்றுவதற்கு ஒரு சடலத்திற்கு 7500 ரூபா வீதம் செலவிடப்படுவதாகவும் வைத்திசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றைரை மாத காலமாக வைத்திசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள் காணப்பட்டதாகவும் இந்த சடலங்கள் தொடர்பாக தற்போதே தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களிற்கு தான் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சத்திர சிகிச்சையின் போதும் பிரசவத்தின் போதும் அகற்றப்படுகின்ற மனித உறுப்புக்கள் யாழ். போதனா வைத்திசாலையில் உள்ள பிரேத அறையிலேயே வைக்கப்பட்டுள்ளன.  உரிமை கோரப்படாத சடலங்களை புதைப்பதற்காக வெளியில் எடுத்துச் செல்லும் போதே அந்த கழிவு உறுப்புக்களும் எடுத்துச் செல்லப்படும் என்றார்.

ஒன்றைரை மாதங்களாக உரிமை கோரப்படாத சடலங்கள் எவையும் இல்லாத காரணத்தினால் அவற்றை வெளியேற்றுவதற்கு தாமதங்கள் ஏற்பட்டதாகவும் மாநகர சபையினால் வைத்தியசாலைக்கென வழங்கப்பட்ட பண்ணைப் பகுதியில் இருக்கின்ற ஒரு பரப்பு காணியிலேயே அவற்றை புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் கிடங்கு வெட்டுவதற்கான வாகனம் இல்லாத காரணத்தினால் அது சாத்தியப்படாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
 
அத்துடன் பிரேத அறையில் இருக்கின்ற 4 குளிரூட்டிகளில் ஒன்று செயலிழந்துள்ளதாகவும் ஏனைய மூன்று குளிரூட்டிகளின் இயலளவு குறைந்துள்ளதாகவும் வைத்திசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X