2025 மே 19, திங்கட்கிழமை

நெல்லியடியில் நடத்தப்படவுள்ள த.தே.ம.மு.வின் போராட்டத்துக்கு அணிதிரளுமாறு மனோ கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடிக்கு அடி இராணுவ பிரசன்னம் இருக்கும் யாழ். குடாநாட்டில் வீடுகள் தாக்கப்படுவதும், கழிவு எண்ணெய் வீசி எச்சரிக்கப்படுவதும், எவரால் நடத்தப்படுகின்றன என்பதை ஊகிப்பது கஷ்டமானது அல்ல. இந்த பின்னணியில், கழிவு எண்ணெய் ஊற்றி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாளைய போராட்டம் இன்றே ஆரம்பித்து வைக்கப்பட்டுவிட்டது.

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இந்த ஜனநாயக போராட்டம், உலகைத் தட்டி எழுப்ப வேண்டும். மக்களுடன் இணைந்து தமிழ் மற்றும் முற்போக்கு கட்சிகள் இந்த போராட்டத்தில் அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை நெல்லியடியில் ஏற்பாடு செய்துள்ள இந்த ஜனநாயக போராட்டத்தில் எமது கட்சி கலந்துகொள்ளும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினை இன்று நிமலரூபனின் படுகொலையுடன் அம்பலத்துக்கு வந்து விட்டது. அடுத்த பிரதான பிரச்சினை, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் சுவீகரிக்கப்படுவதாகும்.

காணி சுவீகரிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் மன உணர்வுகளை உலகின் கவனத்திற்கு அழுத்தமாக கொண்டு செல்லும் பணியினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்திருந்தது. இந்த போராட்டம் இன்று வளர்ச்சி பெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது, காணி சுவீகரிப்பு பிரச்சினையுடன் இணைந்து, அரசியல் கைதிகள் பிரச்சினையையும் முன்னெடுக்கும் முகமாக இந்த ஜனநாயக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துகொண்டு உறுதியான பங்களிப்பை வழங்கும்' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X