2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியசாலை பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சு செயலாளருடன் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 18 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)       

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க வெள்ளிக்கிழமைவரை காலஅவகாசம் வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சின் செயலாளரை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது, சுகாதார அமைச்சு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு சார்பாக செயற்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தினர்; குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதை சுட்டிக்காட்டி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தீர்வுகள் வழங்க தாமதிப்பதால் அனைவரும் பணிப்பாளருக்கு இருக்கும் ஊழல் சம்பவங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தாம் தீர்மானிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கையினை நிறுத்தக் கோரி நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை விசாரணைக்கு வரவுள்ளதால், நீதிமன்றின் உத்தரவை தொடர்ந்து தாய் சங்கம் எடுக்கும் முடிவுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன், நீதிமன்றின் தடை உத்தரவை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவ்வாறு உத்தரவு நீடிக்கப்பட்டால் தாய் சங்கத்தின் ஒத்துழைப்புடன்  எதிர்வரும் திங்கட்கிழமையளவில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X