2025 மே 19, திங்கட்கிழமை

நெல்லியடி ஆர்ப்பாட்டத்தின்போது புலிக் கொடியுடன் வட்டமிட்ட மர்ம நபர்கள்

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நெல்லியடி பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் புலிக்கொடியை ஏந்தியவாறு பஸ் நிலையத்தை வட்டமிட்டுச் சென்றுள்ளனர்.

தலைக்கு கறுப்பு நிறத் தலைக்கவசம் மற்றும் கறுப்பு நிற ஜெக்கட்டும் அணிந்தவாறு இவர்கள் புலிக்கொடியுடன் பஸ் நிலையத்தைச் சுற்றி வந்தனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருந்த நிலையிலேயே இந்த மர்ம நபர்களின் நடமாட்டம் காணப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலே இது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ramanan Wednesday, 18 July 2012 04:58 PM

    இலங்கையில். தொடரும் தமிழ் மக்களின் சாத்வீக போராட்டம் உலக நாடுககளிலும் தொடரட்டும், பரவட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X