2025 மே 19, திங்கட்கிழமை

நெல்லியடியில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ், நெல்லியடி பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினை அடுத்து உயிரிழந்த கைதி நிமலரூபனின் மரணத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வடக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜனநாயக சோசலிச லெனின் கட்சியினர், நவசமஜவாதிக் கட்சியினர், ஜனநாயக மக்கள் முன்னணியினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

'புனர்வாழ்வு முகாம் நம் இளைஞர்களின் புதைகுழியா?' 'புனர்வாழ்வு வேண்டாம் அனைவரையும் விடுதலை செய்' நிமலரூபனின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்' 'சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் சர்வதேசமே அங்கீகரி' என்ற பல்வேறு கோசங்களை எழும்பியவாறு இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் பெருமளவான புலனாய்வாளர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதிய ஜனநாயக சோசலிச லெனின் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல், நவ சமஜவாதிக் கட்சியின் உறுப்பினர் ஜனகன், மலையக மக்கள் முன்னணியின் கொழும்பு நகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X