2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நாளை வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

சட்டவிரோதமாக சாராயம், கள்ளு ஆகிய மதுபான வகைகளை விற்பனை  செய்த குற்றச்சாட்டின் பேரில் 7 பேருக்கு எதிராக யாழ். மதுவரி திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  நாளை வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

புங்குடுதீவு, வேலணை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து மேற்படி மதுபான வகைகளை விற்பனை செய்தவர்கள் நேற்று புதன்கிழமை யாழ். மதுவரித் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ் 7 பேரும் நாளை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X