2025 மே 19, திங்கட்கிழமை

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு நீதிமன்ற நடவடிக்கையை பாதிப்படையும் வகையில் அமையக்கூடாது: யாழ். நீதிவான்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி,ஜெ.டானியல்)

மன்னாரில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடைபெற்ற சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு பொதுமக்களின் நலனையோ அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகளையோ பாதிக்கும் வகையில் அமையக்கூடாதென யாழ். நீதிவான் மா.கணேசராஜா இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதிமன்றத்தின்  மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து யாழ். நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளினால் நடத்தப்படும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் விடுத்துள்ள  அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மன்னாரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் சட்ட முறையான நடவடிக்கை மூலமும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்படியாக அறிவித்தல் கொடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் உசிதமாக இருக்கமுடியுமென யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா கூறியுள்ளார்.

ஏற்கெனவே விசாரணைகள், கட்டளைகள், தீர்ப்புக்கள் தாமதிப்பது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் நீதி தாமதிக்கப்படுவது, நீதி மறுக்கப்படுவதற்கு சமமென தான் கருதுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பில் தாம் எவ்வித தலையீடும் செய்யவில்லையெனவும் நீதிபதியென்ற முறையில் தமது கடமைகளை பொதுமக்களுக்கு பங்கமேற்படாத வகையில் தாம் தொடர்ந்து செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.   இது குறித்து தான் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X