2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீதியில் தவறவிடப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகுத்த இராணுவ வீரருக்கு பாராட்டு

Super User   / 2012 ஜூலை 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எஸ்.கே.பிரசாத்,ரஜனி)


புத்தூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் வீதியில் தவறிவிட்ட பணத்தினை கண்டெடுத்து அதனை கட்டளைத் தளபதியின் ஊடாக  யாழ் இராணுவத் தலைமையகத்திடம் ஒப்படைத்து, முன்மாதிரியாகச் செயற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த  ஹத்துரசிங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை  கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இப்பெண் நகைகளை வங்கியில் அடகு வைத்து பெற்றுக் கொண்ட 41 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அதற்குரிய பற்றுக் சீட்டுக்களையும்  வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் இதனை திருநெல்வேலி பகுதியில் தவறவிட்டுள்ளர்.

அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த  5ஆவது இலங்கை காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த கோப்ரல் ஈ எம். டிக்கிரி பண்டா என்பவரால் குறித்த பெண்மணியின் பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையினை கண்டெடுத்து தனது கட்டளை அதிகாரி மூலமாக படையணித் தலைமையகத்தின் தளபதியிடம் கையளித்துள்ளார்.

இப்பணத்தையும் ஆவணங்களையும்  யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க குறித்த பெண்மணியிடம் நேற்று வெள்ளிக்கிழமை  கையளித்தார்.

அதேவேளை, இராணுவ வீரரின் இந்தச் செயலை பாராட்டி அவருக்கு  யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பரிசையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.



You May Also Like

  Comments - 0

  • nallavan Saturday, 21 July 2012 05:54 PM

    மனிதம் இன்னும் செத்து விட வில்லை.............

    Reply : 0       0

    mauzook29@yahoo.com Saturday, 21 July 2012 05:58 PM

    நல்ல உள்ளங்கள் நலமுடன் வாழ்க.

    Reply : 0       0

    ahamed Sunday, 22 July 2012 04:17 AM

    Congratulations, you are the real government servant. Thank you for your greatest service.

    Reply : 0       0

    Mohammed Rizwan Sunday, 22 July 2012 10:25 AM

    இந்த காலத்தில் கடனாக கொடுத்த காசை கூட திருப்பி தர முடியாது என்டு சொல்லும் காலத்தில் இப்படி ஒரு மனிதன்!

    Reply : 0       0

    Srilankan Sunday, 22 July 2012 11:17 AM

    மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத இயல்பு எல்லொருக்கும் இருந்தால் நாட்டில் பிரச்சனை இருக்காது.... அந்த வீரருக்கு எமது வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ibnuaboo Sunday, 22 July 2012 11:40 AM

    இது கற்பனை காட்சிகளில்தான் வரும். ஆனால் உண்மையில் நடந்துள்ளது. அதுவும் பணஒத்துக்காக ஆளாய் பறக்கும் இக்காலத்தில் அதுவும் ஒரு இராணுவ வீரர் இதை புரிந்துள்ளார்... இப்படி எல்லா பாதுகாப்பு படைவீரர்களும் நேர்மையாக நடந்துகொன்டால் எங்கள் நாட்டு பன்பு உலகெங்கும் பிரகாசிக்கும்

    Reply : 0       0

    imam Sunday, 22 July 2012 12:21 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X