2025 மே 19, திங்கட்கிழமை

இறந்து பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 22 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 
                                                                                           (ஜெ.டானியல்)


யாழ்ப்பாணம், தாவடி கிழக்குப் பகுதியில் இறந்து பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்ததாக கருதப்படும் இச்சிசுவின் தாயாரும் அவருக்கு உதவியதாகக் கருதப்படும் மற்றுமொருவரும் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். 

நிறைமாதக் கர்ப்பிணியான இத்தாய்க்கு நேற்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில்  திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே இறந்த நிலையில் சிசுவை அவர் பிரசவித்தார். இச்சிசு இறந்து பிறந்ததினால் உதவியாளரொருவருடன் இச்சிசுவை இவர் குழி தோண்டிப் புதைத்ததாக விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இத்தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது,  இவர் சிசுவொன்றை பிரசவித்தமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புதைக்கப்பட்ட சிசு நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டி எடுக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X