2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண்பதாக நிர்வாகம் உறுதி

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ் போதனா வைத்திசாலையின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று  திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.

அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நான்கு குழுக்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நான்கு குழுக்களும் நிர்வாகம் சார்ந்த பிரச்சினை, நோயாளர்கள் சார்ந்த பிரச்சினை, சுகாதாரம் சார்ந்த பிரச்சினை, உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினை போன்றன தொடர்பாக ஆய்வு செய்து இன்றைய தினம் அறிக்கை சமர்பித்துள்ளன.

அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டபடி வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆராயப்பட்டன. இதில் பிரதான பிரச்சினையாக நிர்வாகம் சார்ந்த பிரச்சினை பேசப்பட்ட போதிலும் இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் பேசி இதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அடுத்தகட்டப் பிரச்சனையாக நோயாளர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதற்குரிய தீர்வை உரிய முறையில் பெற்று வைத்தியசாலை நிர்வாகம் அதற்குரிய நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டது. வைத்தியாலையில் தற்போது நிலவி வருகின்ற சுகாதார நடைமுறைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், வைத்தியாலையில் உள்ள பிரேத அறையில் சடலங்கள் தேங்கி இருப்பதினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது வைத்திசாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டிகள் பாரமரிக்கின்ற ஒப்பந்தக்காரருக்கு 15 இலட்சத்திற்கு மேலான வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவேண்டியுள்ளதால் பழதடைந்துள்ள குளிரூட்டிகளை திருத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள சம்மந்தப்பட்ட ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொண்ட அமைச்சர், ஒரு வாரகாலத்திற்குள் குளிரூட்டிகளை சீர்செய்யுமாறு தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொடர்பாக தான் கவனம் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் நிலவிவருகின்ற நிர்வாகம் தவிர்ந்த பிரச்சினைகளுக்கு குறிப்பட்ட காலத்திற்கு தீர்வை வைத்திசாலை நிர்வாகம் காணவேண்டும் என்று வைத்திசாலை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X