2025 மே 19, திங்கட்கிழமை

வடமாகாணத்திற்கான தொழிற்கல்வி பயிற்சித் திட்டம் உருவாக்கம்

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)
இளைஞர் விவகார திறன்கள் அமைச்சு வடமாகாணத்திற்கான தொழிற்கல்வி பயிற்சித் திட்டத்தை உருவாக்கவுள்ளது.

இளைஞர் விவகார திறன்கள் விருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் வடமாகாண திட்ட வரைபிற்கான மாநாடு நேற்று திங்கட்கிழமை யாழ்.பொது நூல் நிலைய கோட்போர் கூடத்தில் இளைஞர் விவகார திறன்கள் அமைச்சு ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ஏச்.எஸ்.சுரவீர தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, தொழிற்கல்வி வாய்ப்புகள், தொழிற்கல்வி மூலமான பயிற்சி நெறிகள், வேலை வாய்ப்புகள் தொடர்பான திட்டநெறியை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேவேளை, வடமாகாண கைத்தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை சார்ந்த பயிற்சிநெறி தேவைகள் பற்றியும் அடையாளம் காணப்பட்டது.

வடமாகாண சபையின் மூத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்ட செயலக சிரேஷ்ட அதிகாரிகள், மாவட்ட தனியார் தொழில் வழங்குனர்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக பிரதிநிதிகள் ஆகியோர் இம் மாநாட்டில் கலந்துகொண்டனர்,

குறித்த மாநாட்டில் பொறியியலாளர் கலாநிதி முத்துக்கிருஸ்ணன் சர்வானந்தனினால் வடமாகாணத்தின் பொருளாதாரம், தொழிற்துறைக் கட்டமைப்பு, மற்றும் தொழிற்சந்தை தொடர்பான விரிவுரை ஒன்றும் நடத்தப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X