2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர் உற்சவத்தில் பெண்ணின் தங்க சங்கிலி அபகரிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (ஜெ.டானியல்)
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்தில் கலந்துகொள்வதற்காக இன்று செவ்வாய்கிழமை வருகை தந்திருந்த பக்தர் ஒருவரின் நான்கு பவுண் தங்கச் சங்கிலி காணமல் போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை கூழாவடி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதுடைய கனகசபை சரவஸ்வதி என்ற பெண்ணின் தங்கச் சங்கிலியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

நல்லூருக்கு வரும் பக்தர்கள் தங்களது ஆபரணங்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதோடு தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் பல பாகங்கலிருந்து மக்கள் வருகை தருவதினால் சுமார் 600 பொலிஸார் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். யாழ்.நல்லூரைச் சுற்றி சுமார் 1200 பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் பாதுபாப்புக்காக பொதுமக்கள் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X