2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு சீரான மின்விநியோகம் :யாழ். மாநகர முதல்வர்

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (ஜெ.டானியல்)
யாழ். நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு அடியார்களின் நன்மை கருதி சீரான மின்விநியோகத்தை மேற்கொள்வதற்கு யாழ்.மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் யாழ்.மாநகர பகுதிக்குள் சீரான மின்விநியோகத்தை வழங்குவதற்கு கொழும்பில் இருந்து 250 கே.வி.ஏ (மின்பிறப்பாக்கி) தருவிக்கப்பட்டுள்ளது.

அதனை வைமன் வீதியில் உள்ள மின்மாற்றியுடன் இணைத்து தடையின்றி இன்று முதல் மின்விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X