2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் காந்தியின் சிலை உடைப்புக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அம்மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அகிம்சையின் பெருமைக்கு மெருகூட்டிய உலகம் போற்றும் மகாத்மாகாந்தியின் சிலை விசமிகளால் சிவபூமியான யாழ் மண்ணில் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து இந்நாட்டின் இந்து நிறுவனகங்களினதும் ஆலய நம்பிக்கை பொறுப்புக்களினதும் கூட்டமைப்பான அகில இலங்கை இந்து மாமன்றம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றது.

இந்து தர்மத்தின் வழிநின்று பாரத மாதாவிற்கு விடுதலை பெற்றுத்தந்தவர் தேசப்பிதா மகாத்மாகாந்திஜி. அவரை இன்றும் தெய்வமாகப் போற்றிவரும் யாழ் மண்ணில், யாழ் பண்பாட்டைப்போற்றும் எந்த ஒரு யாழ் மைந்தனும் இச்செயலைச் செய்திருக்கமாட்டான். செய்யப்பட்டிருப்பதை பொறுக்கவும் மாட்டான்.

இப்படியான அனர்த்தங்களை உடன் நிறுத்த அரசாங்கமும், அதிகாரத்திலிருக்கும் அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இப்படியான அபத்தமான செயல்களில் ஈடுபடுபவர்கரளை அடையாளம் கண்டு உரிய தண்டனை வழங்கப்பட ஆவன செய்யவேண்டும்.

மீண்டும் மகாத்மாகாந்தியின் சிலை அதே இடத்தில் சிறப்புற நிலைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தன்னாலான சகல உதவிகளையும் செய்யும்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X