2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காந்தி சிலை உடைப்புக்கு யாழ். மாநாகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ், அரியாலைப் பகுதியில் நேற்று ஞாயிற்றிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால்காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு யாழ் மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற மாதந்தக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியாலைப் பகுதியில் உடைக்கப்பட்ட காந்தியின் சிலை தொடர்பாக சபையில் மேயர் கருத்துக்களை முன்வைத்தபோது எதிர்கட்சி உறுப்பினர்களால் இது சபையில் கண்டனத் தீர்மானமாக கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சபை முதல்வர், கோரிக்கையை ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் அந்தப் பிரரேரணையைச் சபையில் முன்வைத்தார்.

கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் அனைவராலும் ஏக மனதாக எற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X