2025 மே 20, செவ்வாய்க்கிழமை

லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நாளை மறுதினம் யாழ்.விஜயம்

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (ரஜனி)
லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள் அடங்கிய 18 பேர் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் யாழ். மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்தும் அரியாலை, மற்றும் சாவகச்சேரி பகுதி மீள்குடியேற்றங்களை பார்வையிடவுள்ளதுடன், வடமாகாண பிரதம செயலாளரையும், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்குழுவில் லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர்,  8 செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்குவதாகவும், எதிர்வரும் 3 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீள்குடியேற்றம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X