2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத வெடிமருந்தை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                          (ஜெ.டானியல்)
யாழ்.மண்டைதீவுப் கடற்பகுதியில் சட்டவிரோத வெடிமருந்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இன்று செவ்வாய்கிழமை யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

குருநகர் பகுதியைச் சேந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழில் அதிகரிக்கும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவ்வாறான தொழில் முறையில் ஈடுபடுபவர்களின் தொழில் உரிமை விரைவில் தடைசெய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X