2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடபகுதியில் அத்துமீறி நுழையும் மீனவர்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (ஜெ.டானியல்)
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களிடமிருந்து வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறுகோரி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை இந்த மகஜரை அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

இந்த மகஜரின் பிரதிகள் யாழ்.மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆகியோரிடமும் இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த பல வருடங்களாக இந்திய ரோலர் படகுகள் எல்லை மீறி வந்து எமது பகுதிக் கடற்பிரதேசங்களில் உள்ள மீன் வளங்களை முற்றாக அழிவடையச் செய்து வருகின்றன.

இதனால் யாழ்.மாவட்டத்தில் சிறுதொழில் செய்து வரும் மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் தொடர் நடவடிக்கையினால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாழும் மீனவக் குடும்பங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதனைக் கருத்திற் கொண்டு இந்த மக்களைக் காப்பாற்றி அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு உதவவேண்டும். அத்துடன், இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் பலமுறை நடாத்தப்பட்டுள்ள போதிலும் இந்தப் போராட்டங்களால் மீனவ சமூகத்திற்கு இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் அந்த மகஜரில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X