2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றல் மேம்பாட்டு பயிலரங்கு

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

நெடுங்கேணி பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிலரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த பயிலரங்கை மீரா பாரதி நெறிப்படுத்தினார்.

போரினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்கள் தங்களின் குடும்பத்தை சுயாதீனமான முறையில் நிர்வகித்துக் கொள்ளவும் சுய பொருளாதார கட்டமைப்பொன்றை ஏற்படுத்திக் கொள்ளவும் கூடிய ஆற்றல் மற்றும் சுய நம்பிக்கை ஆகியவற்றை வளர்த்து கொள்வதற்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள் இந்த பயிலரங்கில் வழங்கப்பட்டன.

சுமார் 40 பெண்கள் வரையில் கலந்துகொண்ட இந்தப் பயிலரங்கு நெடுங்கேணி பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் ஒத்துழைப்புடன் விழுதுகள் அமைப்பின் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X