2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி.

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ரஜனி)


ஜே.வி.பியின் 'மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக அணி திரள்வோம்' வாகனப் பவனி இன்று மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அங்கு நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முண்னணியின் தலைவர் சோமசன்ச அமரசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் உரை நிகழ்தினர்.

தொடர்ந்த ஊர்வலம் பருத்தித்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமசன்ச அமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் விடுதலை முண்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சுந்திரசேகரன், பிமல் ரட்நாயக்க மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த 500இற்கும் மேற்பட்ட மக்களுடன் தமிழ் மக்களும் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X