2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொருட்களின் தரம், காலாவதியாகும் திகதி என்பவற்றை கருத்திற் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வது அவசியமானதாகும்.

காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பண்டங்களை சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உட்கொண்ட பின்னர் உணவு விஷமாகி பாரிய அசௌகரியம் ஏற்படுகிறது. இதனை வர்த்தகர்கள் கவனத்திற் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யுமாறும், அவ்வாறு காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X